33 ஆம் கல்லூரி, புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி, இலக்கியக் கருத்தரங்கு 2022

2022-TLF---Yishun-Innova-Junior-College

07 May 2022
9.45 am to 12.30 pm


இந்தக் கருத்தரங்கு, முன்னரே பதிவு செய்யப்பட்ட அங்கங்கள், நேரலை அங்கங்கள் ஆகியவற்றுடன் 2 பகுதிகளாக நடைபெறும். கல்லூரி மாணவர்கள் “மாற்றத்தை ஏற்றல்: சவால்களும் தெரிவுகளும்” என்ற கருப்பொருளில் நடத்திய ஆய்வின் படைப்பு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பு வெளிநாட்டுப் பேச்சாளரான மனோவியலாளர் டாக்டர் என். ஷாலினி அவர்களின் சிறப்புரை இடம்பெறும்.

கருத்தரங்கின் இரண்டாம் பகுதி, இரண்டாவது சிறப்புரையுடன் தொடங்கும். சிறப்பு வெளிநாட்டுப் பேச்சாளரான எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பொது அரங்கப் பேச்சாளர் திரு யுகபாரதி உரையாற்றுவார்.

பல்வேறு கல்லூரிகளையும் மில்லேனியா கல்விக்கழகத்தையும் சேர்ந்த பார்வையாளர்களும் மாணவப் பிரதிநிதிகளும், சிறப்புப் பேச்சாளர்களுடன் நேரலை வாயிலாகக் கலந்துரையாடல் அங்கத்தில் பங்கேற்பார்கள். இதுவே கருத்தரங்கின் சிறப்பு அங்கமாகத் திகழும்.

கருத்தரங்குக்கு முன்னதாக, மாணவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் விதமாக, கருத்தரங்கின் கருப்பொருளோடு தொடர்புடைய கட்டுரைப் போட்டி நடத்தப்படும்.

போட்டி விவரங்கள்:
பின்வரும் தலைப்புகளில் 250 முதல் 350 சொற்களுக்குள் கட்டுரை எழுதவேண்டும்:
“மாற்றத்தை ஏற்று, சவால்களைச் சமாளித்தல்”
“மாற்றங்களும் சவால்களும் இன்றி புத்தாக்கமும் படைப்பாற்றலும் சாத்தியமில்லை”
(3 உச்சப் பரிசுகளும் 2 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்)

பரிசளிப்பு, நன்றியுரை, கருத்தளிக்கும் படிவத்தை நிரப்புதல், புகைப்படம் எடுத்தல் ஆகிய அங்கங்களுடன் நிகழ்ச்சி நிறைவுறும்.
Back To Top