ஒரு காேலிச்சித்தரக் கதை சொல்லட்டா? 2022

2022-TLF---Singai---Shall-I-tell-you-a-Comic-Story

01 May 2022
மாலை 5 - 6


ஒரு கேலிச்சித்திரக் கதை சொல்லட்டா? 2022 எனும் ஒரு காமிக் காணொளி போட்டி, அரிதாகக் காணப்படும் ஒரு கதை சொல்லும் வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது! சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு இணைந்து வழங்கும் போட்டி இது!

சித்திர கதைகளை புகைப்படங்கள் மூலம் செய்யும் சவாலை நாங்கள் மாணவர்களுக்கு தருகிறோம். ‘புத்தாக்கம்’ என்னும் தலைப்பில் அக்கதை இருக்கவேண்டும். வயது அடிப்படையில் இரண்டு பிரிவுகள் உள்ளன, 12-16 வயது மற்றும் 17-21 வயது. ஒவ்வொரு பிரிவின் மூன்று சிறந்த கதைகள், போட்டியின் இறுதி சுற்றிற்கு தகுதி பெறும். இறுதி சுற்று போட்டியாளர்கள் அக்கதையை ஒரு காணொளியாக மாற்றுவார்கள்!

மாணவர்கள் சிலருக்கு தங்களின் வரையும் திறன்மேல் நம்பிக்கை இல்லாததால் கேலிச்சித்திரக் கதைகளை உருவாக்க சிறிது அச்சம் கொள்வார்கள். ஆதலால், அவர்களே புகைப்படங்களை எடுத்து, அவற்றை எவ்வாறு கேலிச்சித்திரக் கீற்றுகளாக மாற்றுவது என்பதை நாங்கள் அவர்களுக்கு கற்று கொடுப்போம். இதன்வழி அவர்கள் வெவ்வேறு முக பாவனைகளுடன் புகைப்படம் எடுத்து, அவற்றுடன் பேச்சு குமிழ்களை சேர்த்து, ஒரு கேலிச்சித்திரக் கதையாக உருவாக்க இயலும்!

இறுதி சுற்றிக்கு தகுதிபெறும் ஆறு குழுக்களின் படைப்புகள் இப்போட்டியின் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும். மேலும், நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வகையில் பரிசளிப்பு அங்கமும் இடம்பெறும்.

இதைப்போன்ற காணொளியை பார்ப்பதால் நம் தமிழ் மாணவர்கள் வெவ்வேறு முறைகளில் கதை சொல்வதில் ஆர்வம் கொள்வார்கள் என நம்புகிறோம். மேலும், தமிழ் சொற்களை கேலிச்சித்திர கதைகளில் அதிகம் பார்ப்பதால் அவர்களின் வாசிப்பு புழுக்கமும் அதிகரிக்கும்.

மெய்நிகர் நேரலையில் (ஆங்கில துணைத்தலைப்புகளுடன்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு குழுக்களின் படைப்புகளும் பரிசளிப்பு விழாவும் ஒளிபரப்பாகும். இதன்மூலம் நம் தமிழ் மாணவர்களின் கேலிச்சித்திரக் கதைகள் அனைவரோடும் பகிர்வோம்!
Back To Top