வேற்றுமையில் ஒற்றுமை

2022-TLF---PCF---Unity-in-Diversity

21 April 2022
மதியம் 3 - மாலை 4


PCF-ல், பன்முகத்தன்மை மற்றும் சிறப்புத் தன்மை உள்ள குழந்தைகளை உள்ளடக்குதல், 2022ஆம் ஆண்டிற்கான எங்கள் கருப்பொருள். இந்த நிகழ்வின் நோக்கம் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

நமது தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்லினக் கலாசாரத்தைத் தழுவி நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான வழிகளை ஆராய்வார்கள். செயல்பாட்டின் போது குழந்தைகள் அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டவற்றை நாடகம், பாடல்கள், கவிதை ஒப்பித்தல், கலந்துரையாடல்கள் மற்றும் நடனம் மூலம் வெளிப்படுத்துவார்கள். செயல்முறையின் போது தமிழில் பேச ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளின் சொல்வளம் அதிகரிக்கும். பெற்றோர்களும், எங்களின் பங்காளிகளாக இருந்து தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் அதிகப்படியாகத் தமிழ் மொழியைப் பயன்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமையை ஊக்குவிப்பதில் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்த நேர்மறையான கற்றல் அனுபவங்கள், குழந்தைகள் தமிழ் மொழியை மகிழ்ச்சியான விதத்திலும் பயனுள்ள நோக்கத்திற்காகவும் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
Back To Top