கவியும் நாட்டியமும் 2022

2022-TLF---Omkar-Arts---Kaviyum-Naatiyamum

30 April 2022
மதியம் 3 - இரவு 7


இந்த நடனப் போட்டியில் 3 பிரிவுகள் உள்ளன. இளையர் தனிப்பிரிவு, பெரியவர் தனிப்பிரிவு மற்றும் குழு பிரிவு. பங்கேற்பாளர்கள் 13-25 வயதிற்குள் இருக்க வேண்டும். இளையர் தனிப்பிரிவில் 13 வயதிலிருந்து 18 வயது வரையிலானவர்களும், பெரியவர் தனிப்பிரிவில் 19 வயதிலிருந்து 25 வயது வரையிலானவர்களும் பங்குபெறுவார்கள். குழுப் பிரிவில் 3-5 போட்டியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் எந்த அமைப்பிலிருந்தும் வரலாம். அவர்கள் ஒரு தமிழ்க் கவிஞரின் படைப்பிலிருந்து ஒரு நவீனமான பாரம்பரிய பாடலை அல்லது பாரம்பரிய பாடலை தேர்ந்தெடுத்து அதை ஒரு நடனமாகப் படைக்க வேண்டும். நடனத்தை படைப்பதற்கு முன் குழுவிலிருந்து ஒருவர் கவிஞரைப் பற்றியும், கவிதையைப் பற்றியும் 1.5 நிமிடத்திற்குப் பேச வேண்டும். உதாரணத்திற்கு, ‘மழை’ என்ற பாரதியார் கவிதையைத் தேர்ந்தெடுத்தால், முதலில் கவிஞரைப் பற்றி பேசிவிட்டு, பிறகு கவிதையின் மொழி, கருத்து, கவிதை எழுதப்பட்ட காலத்துடன் இருந்த பொருத்தத்தையும், தற்காலத்துடன் இருக்கும் பொருத்தத்தையும் பற்றி பேச வேண்டும். பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்த பாடலை முன்னதாகவே ஏற்பாட்டாளர்களிடம் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். நடனப் படைப்பு 4-5 நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பங்கேற்பாளர்களின் பேச்சுத் திறன், படைக்கும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். நாட்டியக் கூற்றில் நடனம், ஒருங்கிணைப்பு, ஆடை, அழகியல் மற்றும் நுட்பத்திறன் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள். வெற்றியாளர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வெவ்வேறு கல்வி மற்றும் நடன நிறுவனங்களுக்குக் கடிதங்கள் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். சமூக ஊடகங்கள், நேரடி மின்னஞ்சல்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படும். சிறந்த நடனக் குழுக்கள் ஊடக நிகழ்ச்சிகளில் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் திறமையான நடனக் குழுக்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் என நம்புகிறோம். பெக் கியோ சமூக மன்றத்தில் இப்போட்டியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம். கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால், போட்டி நடக்கும் இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வோம். இந்த நிகழ்ச்சி மதியம் 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரை நடைபெறும்.

ஓம்கார் நடனக் குழுவின் மாணவர்களும் நடனமணிகளும் நிகழ்ச்சியின் துவக்கத்திலும், நடுவர்கள் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் நேரத்திலும் நடனமாடுவார்கள். 2019 ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சியை நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், பல தனிநபர்கள் மற்றும் அணிகளின் பங்கேற்புடன் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, 23 ஏப்ரல் 2022 அன்று ஒரு நடன ஸ்டுடியோவில் முதற்கட்டச் சுற்று நடத்துவோம்.
Back To Top