22 April 2022
மாலை 6.30
வான் தொடும் சிகரங்களைக் கொண்டது இமயம்
மாணவர்களை வெற்றிச் சிகரத்தைத் அடைய உதவுவுது NPS இமயம் தமிழ் மொழி விழா
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு பெறும் இந்த நிகழ்ச்சி ஐந்து ஆண்டுகளாகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு வருடமும் புதுப் புது அங்கங்களுடன் பொலிவுடன் நடைபெற்று வருகிறது. மொழி விளையாட்டுகள் மூலமாக மாணவர்களிடையே தமிழ்மொழி மீது ஆர்வத்தையும் ஆற்றலையும் வளர்க்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. மாணவர்களின் சிந்திக்கும் திறனைத் தூண்டி அவர்களின் திறமையைப் பட்டை தீட்டும் களமாக அமைந்துள்ளது இந்த நிகழ்ச்சி.
மிகச்சிறந்த தலைப்புகளின்கீழ் பேச்சுப்போட்டிகள் மற்றும் பட்டிமன்றங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இங்கு கிடைக்கும் அனுபவத்தால் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு ஆண்டு முழுவதும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் பட்டிமன்றங்களிலும் பேச்சுப்போட்டிகளிலும் கலந்துகொண்டு தனது தனி முத்திரையைப் பதித்து வருகின்றனர் என்பதே இந்த நிகழ்ச்சியின் பெரும் வெற்றியாகும். இந்த ஆண்டு சொல் !வெல் ! போட்டி நடத்தப்பட்டது. இந்தப்போட்டியில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒரு நிமிடம் ஒட்டியும் ஒரு நிமிடம் வெட்டியும் பேசவேண்டும்
நவீன தொழில் நுட்ப உதவியுடன் மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் சொல் விளையாட்டு நடத்தப்படும். இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் நடைபெற்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்வார்கள்.
திருக்குறளை மாணவர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொள்ள இமயம் தமிழ் விழாவில் திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு குறளின் குரல் கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் இந்த NPS தமிழ் இமயம் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் திருவிழா போல் கொண்டாடப்படுகிறது. இது தவிர மாணவர்களின் பாட்டுத் திறமை நடனத் திறமை நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் திறமைகளும் வெளிக்கொணரப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் இதில் பங்கு பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. மாணவர்கள் தமிழை நன்கு கற்றுக் கொள்ளவும் திறமைகளை வெளிப்படுத்தவும் சிறந்த மேடையாகத் திகழ்கிறது இந்த NPS இமயம் தமிழ் மொழி விழா.