29 April 2022
மாலை 4 - 6
தமிழ் மொழி கற்றலில் தொடர்புத் தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகளை இந்த நிகழ்ச்சி ஆராய்கிறது. அதோடு, தமிழ் மொழி கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் இலவச செயலிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. பங்கேற்பாளர்கள் பல்வேறு பொது மூலக் கருவிகளையும் ஐபில்டு செயலியையும் பயன்படுத்தி தமிழ் மொழிக்கான செயலிகளை உருவாக்குவார்கள். அதோடு, இவற்றைப் பயன்படுத்தி கையேடுகள், அறிக்கைகள், மற்றும் தமிழ் மின்-அகராதி, தமிழ் மரபுடைமை, திருக்குறள், ஆத்திச்சூடி போன்ற பாடத்திட்டங்கள் ஆகியவற்றைச் சொந்தமாகத் தயாரிக்கவும் கற்றுக் கொள்வார்கள்.