வானமே எல்லை

2022-TLF---Alagappa---Vaaname-Ellai

03 April 2022
மதியம் 2 - 3.30


இரண்டு இளம் சாதனையாளர்களின் பேச்சு இடம்பெறும் நிகழ்வைப் படைப்பதே எங்களது தற்போதைய திட்டம். நிகழ்ச்சியின் திட்டமிட்ட மொத்த கால அளவு 1- ½ மணி நேரம் மட்டுமே. இரண்டு பேச்சாளர்களுமே சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இளையராக இருப்பர். அனேகமாக ஓர் ஆண் பேச்சாளர்; ஒரு பெண் பேச்சாளர் இடம் பெறுவார்கள். இப்போதுள்ள திட்டப்படி, இந்த இளம் பேச்சாளர்கள் அரசாங்கத்தால் அல்லது மற்ற அமைப்புகளால், தங்கள் திறமை, ஆற்றல் இவற்றின் அடிப்படையில் சிங்கப்பூரில் ஏற்கனவே இனம் கண்டு கொள்ளப்பட்டு, திறமை அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்டவர்களாக இருப்பர். எடுத்துக்காட்டாக, அவர்கள் அரசாங்கச் சேவை ஆணையம் (Public Service Commission) வழங்கும் உபகாரச்சம்பளம், அல்லது அது போன்ற உபகாரச்சம்பளம் பெற்றவர்களாக இருப்பர். இந்த இரண்டு பேச்சாளர்களும் அவரவர் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். தங்களுடைய வெற்றிக்கு அடிகோலிய உறுதி, மனோபாவம் இவற்றைப் பற்றி விளக்குவார்கள். அவர்கள் மேற்கொண்ட திட்டமிடுதல், இலக்கு நிர்ணயம் ஆகியவை குறித்தும் அவர்கள் இருவரும் விவரிப்பார்கள். மிக முக்கிய அம்சமான தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை பற்றியும் அவர்கள் இருவரும் உரையாற்றுவார்கள். “மனமிருந்தால் மார்க்கம் உண்டு” என்ற கோட்பாட்டை வலியுறுத்துவதாக, உரையைக் கேட்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டி, எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் உரை அமையும். தாம் சந்தித்த சவால்களை வென்ற விதம் பற்றிய தம் சொந்த அனுபவங்களைப் பகிரும் விதத்தில் அவர்கள் பேசுவார்கள். இளையர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் போக்கில் இவ்வுரைகள் அமையும். “வானமே எல்லை” என்பதுதான் இவ்வுரைகளின் அடிநாதமாக அமையும். அதுதானே இந்த நிகழ்ச்சியின் தலைப்பு.
Back To Top