07 April 2019
10.00 am to 12.00 noon
இந்த நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தொழில் தொடங்குதல், அமைப்புமுறைகளை நிர்வகித்தல், செயல்முறைகளை நிறுவுதல் ஆகியவை பற்றிக் கற்றுக்கொள்வார்கள். மின்னிலக்க வர்த்தகம் தொடங்குதல், கூட்டாக நிதி வசூலித்தல், வர்த்தக மேம்பாடு, வர்த்தக எண்ணிக்கையை அதிகரித்தல், வர்த்தகத்தை வெளிநாட்டிற்கு விரிவுபடுத்துதல் ஆகியவை பற்றிய குறிப்புகளும் வழங்கப்படும். தற்போதுள்ள வர்த்தக நிறுவனங்களில் எவ்வாறு புதிய பொருட்களையும் சேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம், வர்த்தகம் தொடர்பான சொற்றொடர்களுக்கான தமிழ் அடைமொழிகள் ஆகியவை பற்றிய உட்கருத்துகளும் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொள்ளப்படும்.
ஏற்பாட்டாளர், வாடிக்கையாளர்களுடன் உறவுமுறைகளை அமைத்துக்கொள்வது தொடர்பான முக்கிய உத்திகளையும், வர்த்தக சூழலில் தொடர்புகளைப் பெருக்கிக்கொள்வதற்கான முக்கியத்துவத்தையும் பகிர்ந்துகொள்வார்.