19 April 2019
6.00 pm to 8.00 pm
தமிழ்மொழியில் கிடைக்கப்பெறும் தன்முனைப்பு சிந்தனைகளைக் கொண்டு, தமிழ்மொழியில் எழுதுதல், பேசுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க முனைகிறது ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’ எனும் இந்த நிகழ்ச்சி. இலக்கியச் சொற்பொழிவு ஆற்றவேண்டி, சிறப்புப் பேச்சாளர் ஒருவரும் வரவழைக்கப்படுவார்.
இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் தமிழ்மொழியின் தனித்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை வழிநடத்தவிருக்கிறார்கள். சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பங்களித்த சமூகத் தலைவர் ஒருவருக்கு ‘ஜமாலியன்’ விருதும் வழங்கி சிறப்பிக்கப்படும்.