27 April 2019
2.00 pm to 6.00 pm
‘சொற்போர்’ தொடக்கப்பள்ளி மாணவர்க்ளுக்கான தமிழ் விவாதப் போட்டி. பங்கேற்பாளர்கள் இரண்டு முன்னோட்டச் சுற்றுகள், ஒரு கால்-இறுதிச் சுற்று, ஓர் அரையிறுதிச் சுற்று ஆகியவற்றைக் கடந்து மாபெரும் இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள். போட்டியாளர்கள் பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்வதற்கும் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள், ஆய்வு, எழுத்தாற்றல், பேச்சாற்றல், விவாதிக்கும் திறன் ஆகியவற்றைப் பெற, அந்தப் பயிலரங்குகள் வழிகாட்டும்.
‘சொற்போர்’ பள்ளிகளிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வாகும். இந்த ஆண்டின் ‘சொற்போர்’ முன்னைய ஆண்டுகளைப் போன்று, மாணவர்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் வகையில் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஏற்பாட்டாளர்கள் உறுதியாக உள்ளனர்.