04 April 2019
8.00 pm to 9.30 pm
‘நிலமடந்தை’, குரு ஷாலினி மோகன கண்ணனும் அவர்தம் மாணவர்களும் படைக்கும் நாட்டியப் படைப்பாகும். இது, இரண்டு வாரம் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் இந்திய நுண்கலை விழாவின் ஒரு பகுதியாக அரங்கேறுகிறது. பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் முதலான நடன வகைகளைச் சித்தரிக்கும் இந்தப் படைப்பு, பாரம்பரிய இலக்கியப் படைப்பு ஒன்றை சித்தரிக்கின்றது. நிலப் பகுதிகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என வகுக்கப்பட்டிருந்ததை இப்படைப்பு எடுத்துக்கூறும். இந்தப் படைப்பின் கதையோட்டம், இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஐவகை நிலங்களோடு தொடர்புடைய மனித உணர்வுகளை எடுத்துக்காட்டுகின்றது.