மின்னிலக்கத் தமிழ் - ஈடுபாடு மிகுந்த ஒரு கற்றல் அனுபவம்

2019-TLF---Pixibit-Digital-Tamil-Learning-Experience

06 April 2019
2.00 pm to 5.00 pm


மெய்நிகர்த் தோற்றமும் புனைமெய்மைத் தோற்றமும் வளர்ந்து வரும் சூழலில், அனுபவம் சார்ந்த, புத்தாக்கம் மிகுந்த உள்ளடக்கத்தைக் கொண்டு தமிழ்மொழிக் கற்றலை வழங்க, பிக்ஸிபிட் பிரைவேட் லிமிடெட் எண்ணம் கொண்டுள்ளது.   இதன்வழி, பயனீட்டாளர்களால் புனைமெய்மை மற்றும் மெய்நிகர் உலகை அனுபவத்துப் பார்க்க முடிகின்றது.

 

மின்னிலக்கத் தமிழ் – ஈடுபாடு மிகுந்த ஒரு கற்றல் அனுபவம்’, பங்கேற்பாளர்களை மின்னிலக்க ஊடகங்களில் தமிழ்ப் படைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு மற்றும் இணையம் அடிப்படையிலான பயிலரங்காகும்.   பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில், இறுதிகட்டப் படைப்பானது, தமிழ்மொழி விழாவில் படைக்கப்படும்.

Back To Top