கவியும் நாட்டியமும்

2019-TLF---Omkar-Arts-Kaviyum-Naatiyamum

06 April 2019
3.00 pm to 6.00 pm


‘கவியும் நாட்டியமும்’ நிகழ்ச்சியானது, தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான நடனப் போட்டியாகும்.   பங்கேற்பாளர்கள் ஒரு கவிஞரின் (பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் அல்லது மற்றவர்கள்) பாடலைத் தெரிவு செய்து, பாரம்பரிய அல்லது நவீன முறையில், ஒரு குழுவாக 5-நிமிட நடனம் படைக்கவேண்டும்.   ஒவ்வொரு படைப்பிற்கு முன்னரும், போட்டியாளர்கள் தங்களுடைய கவிதையை வாசித்து, தமிழ்மொழி குறித்த விழிப்புணர்வையும் பயன்பாட்டையும் ஆதரிப்பதில் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறவேண்டும்.

 

குழுக்கள் தங்களது பேச்சுத் திறன், படைக்கும் பாணி, நடன அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, அழகியல் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.

Back To Top