20 April 2019
10.00 am to 11.30 am
‘காராங்குனி பையன்’ எனும் நிகழ்ச்சி, தொடர்புத்தன்மை மிகுந்த ஒரு பயணத்தின் வழி, பிள்ளைகளை ஈடுபடுத்த முற்படுகின்றது. அதன்வழி, பிள்ளைகள் மறுபயனீட்டின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்வார்கள். கைவினை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம், 4 முதல் 6 வயது வரையிலான பிள்ளைகள் மறுபயனீட்டைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்புகளை இப்பயிலரங்கு உருவாக்கித் தர முனைகிறது. அதே வேளையில், அவர்கள் தமிழ்மொழியில் பேசவும், தங்கள் கருத்துகளைத் தன்னம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்ளவும், இப்பயிலரங்கு கைகொடுக்கிறது.