14 April 2019
6.00 pm to 9.00 pm
தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே தமிழ்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் இந்தப் பேச்சுப் போட்டியில், பங்கேற்பாளர்கள், வரவழைக்கப்பட்ட தமிழ் அறிஞர்களிடமிருந்தும் கருத்துகளைக் கேட்டறிவார்கள். பங்கேற்பாளர்கள் ஆற்றும் உரைகள், தமிழ் இலக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் வகையில் அமைந்திருக்கும். அது, தமிழ்மொழி மற்றும் பாரம்பரியத்தின் மீதான புரிந்துணர்வை மேம்படுத்தும். சிந்தனைகள், கருத்துகள், எண்ணங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள வகை செய்யும் நோக்கில், மாணவர்களுக்கும் சிறப்புப் பேச்சாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் அங்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.