21 April 2018
காலை 10 - மதியம் 12.30
இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கு தமிழ் எழுத்துகளின் வரிவடிவப் பிரதி வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கான யோசனை சீனக் கையழகெழுத்தியலிலிருந்து வந்தது. அதே முறை தமிழ் எழுத்துகளுக்கும் பின்பற்றப்படுகிறது. அதை அவர்கள், பெற்றோர்களின் உதவியின்றி தாமாகவே படைப்பாக்கத்துடன் வண்ணமிட வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தமிழ் எழுத்துகளை இளஞ்சாதனையாளர்களிடம் வேடிக்கையான முறையில் அறிமுகப்படுத்தி அவர்கள் தமிழைக் கற்பதற்கு ஆர்வமுண்டாக்குவதாகும்.
இந்த ஆண்டு, இளம் வயதிலேயே கதைப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சிங்கப்பூர் புத்தக மன்றம், கதை சொல்லல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவிருக்கிறது.