பட்டிமன்றம்

08 April 2018
மாலை 6 - இரவு 9


தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளுள் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகிய இந்தப் பட்டிமன்றம் இவ்வாண்டும் மக்களது மனதில் நீங்கா இடத்தினைப் பிடிக்கும் என்பது உறுதி!

இந்தப் பட்டிமன்றத்தின் தலைப்பும், உள்ளடக்கமும் சிங்கப்பூருக்கும், உள்ளூர் கலாச்சாரத்துக்கும் தொடர்புடையதாக இருப்பதை உறுதிப்படுத்த ஏற்பாட்டாளர்கள் முயற்சியெடுத்திருக்கிறார்கள். பேச்சுத்திறன் மற்றும் நகைச்சுவைக் கூறுகளை மட்டும் கொண்டிருக்காமல் மக்களை நமது சமுதாயத்தில் இழையோடும் சிக்கல்களைப் பற்றியும் விழிப்புணர்வுப் பெற நிகழ்ச்சி வடிவமைப்பு ஏதுவாக அமைந்திருப்பதில் நிகழ்ச்சியின் தனித்துவம் அடங்கியுள்ளது.

விவாத வித்தகரும் அறிஞருமாகிய பேராசிரியர் எம். ராமச்சந்திரன் அவர்கள் இந்தப் பட்டிமன்றத்தின் நடுவராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுக் கட்டணம் $10

Back To Top