மாகோ – தேசிய தமிழ் கதை சொல்லும் போட்டி

05 April 2018
மதியம் 3 - மாலை 6


மாகோதேசிய தமிழ் கதை சொல்லும் போட்டி என்பது வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் நிகழ்வாகும். வேடிக்கையான, கவர்ச்சிகரமான மற்றும் புதுமையான முறையில் கதை சொல்லுதலை ஊக்குவிப்பதே இந்தப் போட்டியின் நோக்கம் ஆகும். இளைய தலைமுறையினருக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் போற்றிப் பேணிட இந்தப் போட்டி உதவும். மாணவர்கள் அர்த்தமுள்ள செய்திகளையும், அறிவு, துணிவு மற்றும் ஒற்றுமை போன்ற விழுமியங்களையும் கொண்ட கதைகளைப் பகிர்வார்கள்.

கதை சொல்லுதல் என்பது பழங்காலத்திலிருந்தே புழக்கத்தில் உள்ள ஒரு பழமையான பழக்கம் ஆகும். தற்போதைய காலக்கட்டங்களில் தமிழ் மொழி மீதான ஆர்வத்தையும் தேடலையும் ஊக்குவிக்கும் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

Back To Top