இந்த நிகழ்ச்சி பல்வேறு பழங்காலத் தமிழ்ப் புலவர்களின் இசை வடிவ தமிழ் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மூலம் இசை ஆர்வலர்களிடையே தமிழிசையைப் பிரபலப்படுத்துவதும் மற்றுமொரு நோக்கமாகும்.
தஞ்சாவூர் பாரம்பரிய இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது இசை ஆசிரியர்களோடும் சிங்கப்பூரில் புகழ்பெற்ற மற்ற இசைக் கலைஞர்களோடும் இணைந்து நிகழ்ச்சியைப் படைப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் புத்தக வெளியீடு ஒன்றும் இடம்பெறும். வெளியீடு காண இருக்கின்ற புத்தகத்தின் வழி தமிழிசையின் வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சி ஆராயப்படும். இந்தத் தமிழ்மொழி விழாவிற்காகவே தஞ்சாவூர் பாரம்பரிய இசைப் பள்ளி இப்புத்தக வெளியீட்டு முயற்சியில் இறங்கியிருப்பது பாராட்டிற்குரியதாகும்.