06 April 2018
மதியம் 2 - 5
மாணவர்கள், “லீ கொங் சியேன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில்" ஓர் அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அந்த இடமும், நிகழ்ச்சியின் நடவடிக்கைகளும் ஒன்றிணைந்து பல்வேறு வரலாற்று மாதிரிகள் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சி சிற்பிகள் மன்றத்தின் எட்டாவது தமிழ்மொழி விழா நிகழ்ச்சியாகும். இந்தப் புத்தாக்க நிகழ்ச்சி மாணவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் அதிகமாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி, சிங்கப்பூரில் தமிழ் துடிப்புடன் நீடிப்பதை உறுதிப்படுத்தும் என ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.