30 April 2017
காலை 9 - நண்பகல் 12
உலக அரங்கில் பிரசித்திப்பெற்ற பேச்சாளர் மன்றங்கள் பல இருந்தாலும், தமிழில் பேச்சாளர் மன்றங்கள் இருப்பது சிங்கப்பூரில் மட்டுமே! இந்த நிகழ்ச்சியின் மூலம் மொழியை எவ்வாறு சிறப்பாகக் கையாளலாம் மற்றும் எந்த உத்திமுறைகளைப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையுள்ள பேச்சாளராக விளங்கலாம் என்பனபோன்ற பேச்சுக்கலையின் நுணுக்கங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில தனிநபர்கள், தங்களுடைய பேச்சுத்திறனை வெளிக்கொணர, மாதிரிப் பேச்சுகளை நிகழ்த்துவர்.
இந்த நிகழ்ச்சி சிங்கப்பூரிலுள்ள அனைத்துத் தமிழ்ப் பேச்சாளர் மன்றங்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைய இருக்கின்றது.