29 April 2017
மாலை 6 - இரவு 9
நடன நிகழ்ச்சி, மாறுவேடப்போட்டிகளின் இறுதிச்சுற்று, திருக்குறள் போட்டிகள், திருக்குறள் சார்ந்த பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு என மாணவர்களை மையப்படுத்தி முத்தமிழ் விழா நடைபெற உள்ளது. மேலும் சிங்கப்பூரில் தமிழ் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஒருவருக்கு ‘தமிழவேள்’ விருதும் வழங்கப்படும்.
முத்தமிழ் விழா, மாணவர்களை மட்டுமின்றி, எழுத்தில் ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் தளம் அமைத்துக்கொடுத்து, அவர்கள் வளர வாய்ப்பளிக்கின்றது. முத்தமிழ் விழா போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட சிலர் , இன்று சிங்கப்பூர் படைப்பிலக்கியத்தில் நல்லதொரு பெயர் பெற்றுள்ளனர்.